Wednesday, February 1, 2017

திரிசங்கு

காடுகளை விழுங்கிக்கொண்டு வீங்கிக் கிடக்கும் விங்ஞானம்
சொல்கிறதாம்...
கணினிக் காதலர்கள் பார்வைக்கு இயற்கைச் சூழலும், பச்சை நிறமும்
நன்று என்று...

இதற்கென செயற்க்கை பிரசவித்தது ஒரு இயற்கைச்
சூழலை...
Recycled நீர் ஊற்றாம், பெயர்த்து எடுத்து வந்த புல் தரையாம்
உரம் உண்ணும் உயிர் இனங்கலாம்...
இதன் பெயர் தான் திரிசங்கு சொர்காமோ?...
-MIRA

மாயன் கணிப்பு

மாயன் கணிப்பு மெய்ப் பட்டு விட்டால் மட்டும் என்ன?
மானுடம் மாண்டுவிடும், பின்பு
புது மலராய் புவி பிறப்பெடுக்கும்,
மீண்டும் மிருகத்தில் இருந்து
மனிதன் பிறப்பெடுப்பான்...
மனிதனில் இருந்த மிருகம் தான் தலை தூக்க
ஆரம்பித்து விட்டதே...
இனி வாழ்க்கை ஒரு வட்டம்!!!
-MIRA

உன் தோள் சாய்ந்து விட்டதால்

விடி காலை வேளையில்...
வீடுகள் அண்டாத அகண்ட
செம்மண் பரப்பில்...
நீண்ட தார்ச்சாலையில்
ஒற்றை நிலவாய் நீந்தும்
பேருந்து பயணத்தில்...
பதியவில்லை மனது
உன் தோள் சாய்ந்து விட்டதால்...
-MIRA
"எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?"
சோகத்தில் சொல்லும் சொற்கள் ஏனோ
மறக்கின்றது மகிழ்ச்சியான தருணங்களில்...
தேர்வு முடிந்த பின்பு மறக்கும் மனப்பாட பகுதி போல...
-MIRA

உன் நினைவுகள்

எங்கு CID வேலைப்பார்ததனவோ உன் நினைவுகள்?
தனித்திருக்கும் நேரம் பார்த்து
துணைக்கு வந்து விடுகின்றன...!!!
-MIRA

மழையே பொழிந்துவிடு!!!

கனிந்து உருக வேண்டாம்,
காறி உமிழவும் கூடாதோ?
கார்மேகமே...
கடல் உண்ட நன்றியை மறக்க வேண்டாம்
பயிர் கொலை நீ செய்ய வேண்டாம்
மழையே பொழிந்துவிடு!!!
-MIRA

குறட்டை

மூச்சுக் காற்றின் முத்தச் சத்தம்
மூக்குத் துவாரத்தில் விளையாடும் புகைவண்டி
சுவாசக் குழந்தை சீண்டிய வானொலி
குறட்டை...

-MIRA