Monday, October 8, 2007

கனவு


இடி இடித்து மேகப் பை கிழிக்க

மின்னல் வந்து அதை தைக்க

மீறிக்கொண்டு மழை பொழிய

நதிக்கரையில் நான் நனைய

கரண்ட் கட் கோடை வெட்பத்தில்

அடங்காமல் அகன்று விழித்தன விழிகள்...
கண் திறந்ததும் தான் கண்டு கொண்டேன்

கண்டது கனவுஎன்று...
--mira

ஒரு தலை காதல்....


பத்து தலை ராவணனின்
தலை துண்டித்த ஒரு தலை காதல்....
--mira

அனாதை


அம்மா -officeக்கும் அடுப்பபடிகுமே

appoinment போதவில்லை...

அப்பா- எப்போதாவது வருவதுண்டு

விருந்தினறைபோல...

அன்பு- அறவே இல்லை

பாசம்-பஞ்சத்தில் இருக்கும் தண்ணீர் குடம்
விளைவு- ration cardடில் மட்டுமல்ல rank cardடிலும் 'H' முத்திரை உடன்
அனாதையாய் நான்...

Wednesday, October 3, 2007

உரிமை






மங்கைக்குள் மனிதப் பயிர் இட்டு

முதல் எழுத்தின் முழு உரிமையையும்
விதையே பெரும் விந்தை !!!

இதனால் தானா...

பெண்ணை மண்ணுக்கு ஒப்பிடுகிறோம்???...



--MIRA